கன்னியாகுமரி:பேரறிஞர் அண்ணாவை மூல ஆதாரமாக கொண்டு திமுக அரசியல் நடத்தி வருகிறது. பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஜன.03) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். திராவிட மாடல் அரசு என பெருமைப் பட்டுக்கொள்ளும் திமுக அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்ற கேள்வியை முன் வைத்தனர்.