கன்னியாகுமரி தனியார் கல்லூரி ஒன்றில் விளையாட்டு விழா நடைபெற்றது. அதில் மாணவிகள் தற்காப்புக் கலைக்கான செய்முறை விளக்கமளித்தனர். மேலும் தற்போது நாட்டில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் நோக்கில் தற்காப்புக் கலைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
பெண்கள் தற்காப்புக் கலைகள் கற்கவேண்டி மாணவிகள் விழிப்புணர்வு! - Martial art performed in private college at kanniyakumari
குமரி: பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், பெண்களின் தற்காப்புக்கான செய்முறை விளக்கமளித்து கல்லூரி விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Martial art
கல்லூரி விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு தற்காப்பு திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.