கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி பகுதியை சேர்ந்தவர் சகாய டிலானி (28). இவரது கணவர் ஆரோக்கியதாசன். இந்த தம்பதியருக்கு ஆரோக்கிய ஜினோத் (10) என்ற மகனும், சகாய ஜிகா (11) என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, கணவர் ஆரோக்கியதாசனிடம் தகராறு செய்துகொண்டு ஒரு வருடம் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருடன் சகாய டிலானி குடும்பம் நடத்திவந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் சகாய டிலானியிடம் சமரசம் பேசி கணவர் ஆரோக்கியதாசனுடம் வாழ ஏற்பாடு செய்துள்ளனர்.