கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்குத் திருமணமாகி ஒன்பது மாதக் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று (அக். 18) பிரியா தனது குழந்தையுடன் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றுவருவதாகக் கணவரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கணவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில் தனது மனைவியையும் குழந்தையையும் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார் எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணையும், அவரது குழந்தையையும் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: வழிப்பறி, பட்டாக்கத்தி தாக்குதல் சென்னையில் அதிகரிக்கும் வன்முறை!