தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி - இளைஞர்கள் போஸ்டர் - kanniyakumari district news

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் என முதியவர் ஒருவரின் போட்டோவுடன் ஒட்டப்பட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

marriage-stoping-issue-banner
marriage-stoping-issue-banner

By

Published : Jul 9, 2021, 9:28 PM IST

கன்னியாகுமரி: சமீப காலமாக இளைஞர்கள் வரன் பார்ப்பதும், வரன் சம்பந்தமாக பெண் வீட்டார் இளைஞர்களின் சொந்த ஊரில் விசாரிக்க செல்லும்போது டீக்கடை பெஞ்ச் ஆசாமிகள் புறம் பேசி வரன்களை தடுப்பதும் குளச்சல் அருகே தொடர்கதை ஆகி வருகிறது.

வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி

இதனால் இளைஞர்கள் சார்பில், வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர் சங்கம் என்றும் மொட்டையாக பேனர் வைப்பதும் போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து வந்தனர்.

புது டிரெண்டிங்

இந்நிலையில், புது டிரெண்டிங்காக குளச்சல் அருகே அயினி விளை, பிச்சன் விளை இளைஞர்கள் ஒருபடி மேலே சென்று அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் பெஞ்சமின் என்பவர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உக்கார்ந்திருக்கும் போட்டோவை போஸ்டரில் போட்டுள்ளனர்.

அதில், ”திருமணம் விலக்குவோர் சங்க தலைவர், தொழில் திருமண வரன் தடுத்தல், உப தொழில் பலசரக்கு வியாபாரம் என சுய விவர பேனர் வைத்துள்ளனர்.

திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

மேலும், திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்" என்று அயினி விளை, பிச்சன்விளை பகுதி மட்டுமில்லாமல் குளச்சல், கருங்கல் பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்கள்:

அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்திய முன்னாள் மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details