தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் 107 கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அலுவலர்கள்! - kanniyakumari latest news

கன்னியாகுமரி : நாகர்கோவில் வடசேரி சந்தையில் 90 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி செலுத்தாத 107 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்த சம்பவம் சந்தை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

market-shop-sealed-in-kanniyakumari
market-shop-sealed-in-kanniyakumari

By

Published : Feb 18, 2021, 9:56 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனமூலம் சந்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சந்தையில் 260 நிரந்தர கடைகள், ஏராளமான தற்காலிக கடைகள் உள்ளன.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை முறையாக செலுத்தாதால் வடசேரி சந்தை வியாபாரிகளுக்கு அலுவலர்கள் அறிவிப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், 91 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருந்த நிலையில், இன்று (பிப்.18) மாநகராட்சி அலுவலர்கள், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாடகை பாக்கி செலுத்தாத 107 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் சந்தை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details