தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் இன்றே பொருட்களை வாங்கி குவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
நாளை முதல் ஊரடங்கு உத்தரவு - அத்தியாவசிய பொருள்களை வாங்க குவிந்த மக்கள்! - Kanyakumari curfew
கன்னியாகுமரி: நாளை முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் இன்று இரவே அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் நாளை முதல் எந்த கடைகளும் திறக்காது என்ற வதந்தி கிளம்பியதால், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். இதனால் சந்தைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மளிகை பொருட்கள் வாங்கும் கடைகளிலும் பொதுமக்கள் போட்டிபோட்டு பொருட்களை வாங்கினர். பொருட்கள் வாங்க பல இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை: களத்தில் இறங்கிய பஞ்சாயத்து தலைவர்கள்