கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவுக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள புலியூர் சாலை கிராமத்தில், ஆற்றுப்படுகையோரம் பிவிசி பிளாஸ்டிக் பைப் தொழிற்சாலை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில், இதுபோன்ற தொழிற்சாலை அமைப்பதன் மூலம் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவுகிறது.
பிவிசி பிளாஸ்டிக் பைப் தொழிற்சாலை தொடங்கக்கூடாது; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! - Kanyakumari vilvangodu
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா பகுதியில் பிவிசி பிளாஸ்டிக் பைப் தொழிற்சாலை தொடங்குவதை உடனே தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
பிவிசி பிளாஸ்டிக் பைப் தொழிற்சாலை தொடங்கக்கூடாது; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ஆனால், இதைக் கருத்தில் கொள்ளாமல் அலுவலர்கள் கையூட்டு பெற்று கொண்டு இந்த தொழிற்சாலையை அமைக்க அனுமதி அளித்துள்ளதாகவும், இதற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (நவ.30) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
இதையும் படிங்க:நாகராஜா கோயில் தை திருவிழா கால்கோள் விழா!