தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து: அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி

கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து கோயிலின் புனிதம் மாறாமல் போர்கால அடிப்படையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து விவகாரம்:  அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து விவகாரம்: அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

By

Published : Jun 4, 2021, 10:05 PM IST

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோயிலின் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில், இன்று (ஜூன்4) அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

இது குறித்து, அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ’’கடந்த 2 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோயிலின் மேற்கூரை எரித்துள்ளது. 25 அடி உயரம் தீ பற்றி எரித்தும் கோயிலில் கருவறையில் தீ பிடிக்கவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது போல், பகவதி அம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் மனம் கோணாமல், கோவிலின் புனிதம் மாறாமல் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் உள்பட நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பூசாரிகளை விசாரணை செய்துள்ளனர். முழு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய அவுட்கேஸ்ட் கால்பந்து விளையாட்டு குழுவினர்

ABOUT THE AUTHOR

...view details