கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் அருண் குமார்(34). இவருக்கும், இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை! - Kanyakumari district news
கன்னியாகுமரி: மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருண் குமார்
இந்நிலையில் விரக்தியடைந்த அருண்குமார் இன்று(அக்.09) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அருண் குமாருக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:படித்தது ஹோமியோ; பார்ப்பது அலோபதி சிகிச்சை