கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை சேர்ந்தவர் கேசவன். இவர் அரசு ரப்பர் கழகத்தில் தற்காலிக பால்வெட்டும் தொழிலாளியாக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு காலத்தில் வீட்டில் இருந்தபோது, கடந்த 2016ஆம் ஆண்டு அவரது வீட்டு அருகே உள்ள கூலித் தொழிலாளியின் மகளான 17 வயது மனநலம் குன்றிய சிறுமியை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் விசாரணை செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.