தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள லாட்டரியில் 10 கோடி வென்ற ‘லக்கி’ தமிழன்... கேன்சர் நோயாளிகளுக்கு உதவி செய்ய போவதாக பெருமிதம்! - doctor

லாட்டரியில் விழுந்த ரூ.10 கோடி பரிசு தொகையினை தங்களது தேவைக்குமேல் உள்ள மீதி பணத்தை புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவி செய்ய போவதாக கூறியுள்ளார் லக்கி தமிழன்.

கேரள லாட்டரியில் 10 கோடி வென்ற ‘லக்கி’ தமிழன்
கேரள லாட்டரியில் 10 கோடி வென்ற ‘லக்கி’ தமிழன்

By

Published : Jun 2, 2022, 10:13 AM IST

Updated : Jun 2, 2022, 12:40 PM IST

கன்னியாகுமரி: கேரளாவில் லாட்டரி குலுக்கலில் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு முதல் பரிசாக ரூ.10 கோடி விழுந்துள்ளது. உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்று வரும் போது லாட்டரி வாங்கியதாகவும், அதன் மூலம் தனக்கு அதிருஷ்டம் அடித்துள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகாரப்பூர்வமாக கேரளா அரசின் கீழ் நடைபெற்று வருகிறது. மலையாள புத்தாண்டு தினமான விஷு கடந்த மாதம் கொண்டாடபட்டதை தொடர்ந்து ரூபாய் 10 கோடிக்கான லாட்டரி பரிசுச்சீட்டு விற்பனை நடத்தப்பட்டது.

இந்தப் 10 கோடி பரிசுத்தொகைக்காக 43 லட்சத்து 69 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. முதல் பரிசான 10 கோடி ரூபாய் எச்பி 727990 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 22ஆம் தேதி வெளியானது. ஆனால், 10 கோடியை வென்ற லாட்டரிச்சீட்டின் எண் அறிவிக்கப்பட்டும் யாருமே கேரள அரசை அணுகவில்லை.

கேரள லாட்டரியில் 10 கோடி வென்ற ‘லக்கி’ தமிழன்

திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே சில்லறை விற்பனை செய்யும் கடையில்தான் இந்த லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த லாட்டரி சீட்டை வாங்கியவர் வெளியூர் அல்லது வெளிநாட்டைச் சேர்நதவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வந்தனர்.

ரூபாய் 10 கோடி பரிசுத்தொகையை வென்ற லாட்டரிச்சீட்டு உரிமையாளர் யார்?என்று கேரள அரசு அவரைத் தீவிரமாக தேடி வந்தது. ஒரு லாட்டரிச் சீட்டின் விலை 280 ரூபாய். முதல் பரிசு ரூபாய் 10 கோடி ஆகும்.

இந்நிலையில் 10 கோடி லாட்டரியில் வென்றவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு மருத்துவர் மற்றும் அவரது உறவினர் என்பது தெரிய வந்தது. முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் குமார் மற்றும் அவரது உறவினரான ரமேஷ் சேர்ந்து இந்த லாட்டரி சீட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியுள்ளனர்.

விரைவில் அவர்களுக்குரிய பரிசு தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு பரிசு கிடைத்தது குறித்து டாக்டர் பிரதீப் குமார் கூறுகையில், குலுக்கல் நடைபெற்று மூன்று நாள்களுக்கு பின்னரே தாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்தது தெரியவந்ததாகவும் அதன் பின்னர் தங்கள் ஊரில் நடைபெற்ற திருவிழா மற்றும் உறவினரின் மரணம் என பல வேலைகளுக்கு பின்பு கேரள அரசு லாட்டரி அலுவலகத்தில் சென்று லாட்டரி சீட்டை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் கேரளாவிற்கு அடிக்கடி செல்கையில் இருவரும் இணைந்து தான் லாட்டரி வாங்குவோம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் பரிசு கிடைத்தது உள்ளது. ஆனால் இதுபோன்று பெரிய அளவில் பரிசுத்தொகை விழுந்தது இல்லை. மேலும் கரோனா காலக் கட்டத்தில் பல பேருக்கு சேவை செய்திருப்பதாகவும், தன் நண்பரை கூட இழந்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

அவர் தன்னுடைய தேவைகள் போக மீதமுள்ள தொகையினை கேன்சர் நோயாளிகளுக்கு செலவு செய்ய இருப்பதாகவும், இதற்கான வாய்ப்பை தந்த கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்' என்று கூறினார். பிரதீப் குமார் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி முதல் பரிசு பெற்ற சம்பவம் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு இன்றி எங்கு இருந்தாலும் அதிர்ஷ்டம் தங்களை தேடி வரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: கோடை விடுமுறையை கொண்டாட திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்



Last Updated : Jun 2, 2022, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details