கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கோடி முனையில் உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய டாட்டா கார் ஒன்று வந்தது, அதனை சோதனையிட்ட காவல் துறையினர் அதில் மூன்று டன் எடையுள்ள ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றவர் கைது! - அரிசி
கன்னியாகுமரி : குளச்சல் அருகே கோடி முனையில் சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற மூன்று டன் எடையுள்ள அரிசியை உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கேரளாவிற்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
பின்பு, அரிசி கடத்திவந்த மீனச்சல் என்னும் ஊரைச் சேர்ந்த வினு என்பவரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும், இதில் தப்பி ஓடிய சுரேஷ், சாகுல் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.