கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்துள்ள சூரங்குடி பகுதியில் ஈத்தாமொழி காவல் நிலைய காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை காவல் துறையினர் சோதனை செய்தனர்.
சோதனையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த இளைஞரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 200 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.