குமரி மாவட்டம் வடக்கு தாமரை குளம் மெயின் ரோடு அருகில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் இதுகுறித்து தென் தாமரை குளம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், துர்நாற்றம் வீசிய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் பெயர் மன்னபெருமாள் (62) என்பதும், அவர் தனியார் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் இரு மகள்களுக்கும், ஒரு மகனுக்கு திருமணமாகியுள்ளது.