கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தில் இருந்து வீரநாராயண மங்கலம் செல்லும் சாலையோரம் பாறையாறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்கு இன்று (மார்ச் 9) தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து நாகர்கோவில் டிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அதில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல், பாதி எரிந்த நிலையில் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.