கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகே மைலாடி விலக்கு பகுதியில் புதிதாக நான்கு வழிச்சாலைகள் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் உள்ள பாலத்தின் அடியில் உடல்முழுவதும் காயங்களுடன் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.
தோவாளை அருகே ஆண் சடலம்! - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: தோவாளை அருகே மைலாடி விலக்கு நான்கு வழிச் சாலை பாலத்தின் அடியில் காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோவாளை அருகே ஆண் சடலம்
சடலத்திலிருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்ததால், இவ்வழியே சென்ற பொதுமக்கள் அப்பாலத்தின் அடியே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.