மாலத்தீவிலிருந்து கடந்த 22ஆம் தேதி பெங்களூரு வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் தருமபுரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வாகனங்கள் மூலம் குமரி மாவட்டத்துக்கு அழைத்துவரப்பட்டு விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த வெளிமாநிலங்களிலிருந்து வந்த மூன்று பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் மாலத்தீவிலிருந்து வந்த 12 பேரில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ள அறைகளில் தகுந்த இடைவெளி இல்லை, கட்டில்களில் போர்வை இல்லை, கிருமி நாசினி தெளிப்பது இல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.
மேலும் கரோனா பாதித்தவர்கள் தங்கியிருந்த அறைகளிலிருந்து இவர்களை வேறு விடுதியில் தங்கவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டு தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் உதவி கேட்டுள்ளனர். இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க... கரோனாவை குணப்படுத்த அக்குபஞ்சர் சிகிச்சைக்கு அனுமதி கேட்டு வழக்கு!