நாட்டில் எங்கும் நிகழாத வகையில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 110 கிலோமீட்டர் தூரம் உள்ள 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடந்தே சென்று வழிபாடு செய்யும் சிவாலய ஓட்டம் நேற்று (மார்ச் 10) மாலை தொடங்கியது.
மகா சிவராத்திரி: சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் - சிவாலய ஓட்டம்
கன்னியாகுமரி: மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் சிவாலய ஓட்டத்தில் தமிழ்நாடு - கேரளாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
maha
அதன்படி முதல் கோயிலான முன்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து கோவிந்தா- கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் நடந்தும், ஓடியும் கடந்தனர். இந்த ஓட்டத்தை நாளை (மார்ச் 12) அதிகாலை திருநட்டாலம் சங்கர நாராயணர் கோயிலில் நிறைவு செய்கின்றனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு - கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று (மார்ச் 11) மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.