கன்னியாகுமரி மாவட்டம் மணவிளை கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் மகள் ஆனந்தி (17), சுசீந்திரம் எஸ்எம்எஸ் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். ஆனந்தி, அதே பகுதியில் வசித்துவரும் பெரியசாமி என்பவர் மகனான அஜித் (21) என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
சிறுவயது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தற்கொலை - சிறுவயது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு
கன்னியாகுமரி: சிறுவயது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
kumari 1
இந்நிலையில் மாணவி ஆனந்தியிடம் சிறு வயது காதல் குறித்து பெற்றோர் பலமுறை எச்சரித்து வந்துள்ளனர். இதில் மனவேதனையடைந்த காதல் ஜோடிகள் திடீரென தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சுசீந்திரம் காவல் துறையினர் தற்கொலை செய்துகொண்ட இருவர் உடலையும் கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.