தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி இருந்த காலத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன், சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகளை உருவாக்கியதன் அடிப்படையில் பலர் இன்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் தற்போது, தமிழ்நாட்டில் தொழில்கள் பெருமளவில் முடங்கிவிட்டன.
இதை சரிசெய்வதற்கு மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டதும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று திமுக மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளதால் புதியதாக திமுக பொறியாளர் அணி அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பொறியாளர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரியில் அகஸ்தீஸ்வரத்தில் பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான என். சுரேஷ்ராஜன், பொறியாளர் அணி மாநில துணை அமைப்பாளர் பிரதீப், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் முன்னிலையில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள், மாணவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதே போன்று தக்கலையில் பொறியாளர் அணி அமைப்பாளர் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஏராளமானோர் திமுகவில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க:'ஒரே இரவில் 18 செல்போன்கள் ', 'திருவொற்றியூர் முதல் கடற்கரை வரை'- அதிரவைத்த திருடனின் வாக்குமூலம்!