தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வார வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் சார்பில் கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் முன்பு வாகனப் பரப்புரை பயணம் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த வாகன பரப்புரையை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ராஜகோபால் தொடக்கி வைக்க இருந்தார்.
பரப்புரை வாகனத்தை சிறைப்பிடித்த காவல்துறை - கன்னியாகுமரியில் பரபரப்பு - police
கன்னியாகுமரி: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் சார்பில் நடைபெற பரப்புரை பயணத்திற்கான வாகனத்தை காவல்துறையினர் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
kanniyakumari
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பரப்புரை மேற்கொள்ள வாகனத்திற்கு உரிய அனுமதி வாங்காததால் வாகன பரப்புரை செய்ய அனுமதிக்க முடியாது எனக் கூறி பரப்புரை வாகனத்தை காவல்துறையினர் சிறைபிடித்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.