குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வைத்து மாவட்ட நீதிபதி அருண்முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையிலுள்ள 2,984 வழக்குகள் விசாரணைக்கு வருகிறது!
கன்னியாகுமரி: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் 14ஆம் தேதி நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையிலுள்ள 2,984 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
அதன்படி அன்றைய தினம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இதில் உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, குற்றவியல், காசோலை உள்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 2,984 வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
வழக்கு விசாரணையின்போது சமரசமாகச் செல்பவர்களுக்கு உடனடி இழப்பீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதேபோன்று இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,214 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,153 வழக்குகள் சமரசமாக முடிந்தன. இந்த வழக்குகளின் மூலம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 39 ஆயிரத்து 745 பெறப்பட்டது” என அவர் கூறினார்.