தமிழ்நாடு முழுவதும் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை ஓய்வு பெற்றது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நாடான் குளம் பகுதியில் தடையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு உள்ள டாஸ்மாக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.