கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிக்கடி போலி மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகாலையிலேயே மது குடிக்கும் குடிமகன்களை குறிவைத்து இந்தப் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல அதிகாலையில் குடிக்கும் குடிமகன்களை குறிவைத்து டாஸ்மாக்கில் இருந்து மதுபானங்களை அதிகளவு வாங்கி பதுக்கி வைத்து பின்னர் அரசு அனுமதியின்றி அதிக விலைக்கு 24 மணி நேரமும் விற்பனை செய்யும் தொழில் குமரி மாவட்டத்தில் களைகட்டுகிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.