தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலுவலக லிப்ட்டுக்குள் சிக்கி எல்ஐசி ஏஜெண்ட் உயிரிழப்பு! - லிப்ட்க்குள் சிக்கி எல்ஐசி ஏஜென்ட் பலி

கன்னியாகுமரி: எல்ஐசி அலுவலகத்தின் லிப்ட் அடியில் சிக்கி ஏஜெண்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

LIC agent death inside lift  at office in kanniyakumari
LIC agent death inside lift at office in kanniyakumari

By

Published : Dec 12, 2020, 6:41 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(66). எல்ஐசி ஏஜெண்ட் சங்க தலைவரான இவர், வெட்டூர்ணிமடத்தில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு பணம் செலுத்த சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தார் எல்ஐசி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அவர் ஏற்கனவே வந்து பணம் கட்டிவிட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் அவருடைய கார் அலுவலகத்திற்கு அருகில் நின்றிருந்தது. அப்போது அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது லிப்ட் பகுதியில் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது லிப்ட் அடியில் சிக்கி ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாக கிடந்தார்.

இந்த தகவலறிந்து வந்த வடசேரி காவல்துறையினர், கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details