கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள காரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்பதி டைலஸ் - மேரி ஜெசிந்தா. இவர்களின் மகன் யூஜின் (36). இவர் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார்.
தற்போது கன்னியாகுமரியில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆறு, குளங்களில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இந்நிலையில் யூஜின் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் யூஜின் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், யூஜினின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து அருமனை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
இதையும் படிங்க:’இனி 2 வயது முதல் கோவாக்சின் தடுப்பூசி’ - டிசிஜிஐ அனுமதி