குமரி மாவட்டம், கோட்டார் பகுதி வணிக தலங்கள் நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் எப்போதும் லாரிகளில் வணிகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் இருக்கும். இதனால் இந்தப் பகுதி எப்போதுமே போக்குவரத்து நெருக்கடி மிகுந்து பரபரப்பாகக் காணப்படும்.
இப்பகுதியில் லாரிகளில் வரும் பாரங்களை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் லாரிகளில் வரும் பாரங்களை அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இறக்கி கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டார் பகுதியில் பகலில் அதிக நெருக்கடி ஏற்படுவதாகவும், இதனால் லாரிகளில் வரும் பொருட்களை இரவு நேரத்தில் மட்டுமே இறக்க வேண்டும் எனவும் அலுவலர்கள் கெடிபிடி விதித்துள்ளனர்.