தமிழ்நாடு

tamil nadu

கூலித் தொழிலாளி கொலை: முன்விரோதம் காரணமா?

By

Published : Sep 7, 2020, 4:06 PM IST

குமரி: முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தொழிலாளி
தொழிலாளி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அலெக்ஸ் பிரேம் (38). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத் என்பவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் காவல் துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்றிரவு அலெக்ஸ் பிரேம் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருக்கும்போது அங்கு குடிபோதையில் வந்த புருஷோத் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் அலெக்ஸ் பிரேமை கீழே தள்ளித் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அலெக்ஸ் பிரேம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆசாரிப்பள்ளம் காவல் துறையினர் புருஷோத்தை கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து மேலும் 5 பேரிடம் விசாரணை நடைபெற்றுவருகின்றது.

இதையும் படிங்க:போலி நகையை கொடுத்து நகை வாங்கிய இரு பெண்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details