கன்னியாகுமரி: அருமனையை அடுத்துள்ள வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கிருஷ்ணன்குட்டி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது மகள் நித்யாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நித்யா விவாகரத்து பெற்றுக் கொண்டு, தாய் வீட்டுக்கே வந்துவிட்டார்.
இந்த நிலையில், கிருஷ்ணன்குட்டி, அவரது மகள் நித்யா, மனைவி ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர், அவர்களது உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.