கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் இரண்டு ஆண்டுகள் பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் கூறி, இன்று (மே.24) காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போரட்டத்தில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். இதில், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அதன்படி லேப் டெக்னீசியன் மாணவர்கள் கரோனா நோயாளிகள் தங்கும் அறை அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முறையான உணவு வழங்கப்படவில்லை. பல மாணவர்கள் காசு கொடுத்து உணவு வாங்கி உண்ணும் நிலையில் உள்ளனர்.