கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (பிப்.23) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் அவருடைய இயலாமை. அவருக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை. அவர்களது எம்எல்ஏக்களால் தான் ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு பாஜக காரணம் இல்லை.
கோவையில் வரும் 25ஆம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.