குமரி மாவட்டத்தில் கடுமையான வெப்பம் இருந்த போதிலும், ஒரு வாரகாலம் தொடர்ந்து பெய்த கோடை மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியாக காணப்பட்டது.
வாட்டி வதைக்கும் வெயில்; குளிர்பானங்களை தேடும் குமரி மக்கள்! - கன்னியாகுமரி
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் தர்பூசணிப் பழம், சர்பத், இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது.
File pic
இந்நிலையில் தற்போது மழை இல்லாததால் வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் பிடியில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு, சர்பத் போன்ற குளிர்பானங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இவற்றின் விற்பனையும், விலையும் சூடு பிடித்துள்ளது.