தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி இளைஞர்கள் புதிய முயற்சி... வாட்ஸ் ஆப்பில் இணைந்து மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டம்!

குமரி: இளைஞர்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஒன்றிணைந்து "குமரி நேச்சுரல் கிங்ஸ் அண்ட் குயின்" என்ற அமைப்பு உருவாக்கி, திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு சமுதாய பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டம்

By

Published : Nov 25, 2019, 1:01 PM IST

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகக் குமரி ஜவான்ஸ் என்ற அமைப்பினரும், இளைஞர்களும் பொது இடங்களைச் சுத்தப்படுத்துதல், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பசுமைப் புரட்சி பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதைப் போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பேஸ்புக், வாட்ஸ ஆப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து "குமரி நேச்சுரல் கிங்ஸ் அண்ட் குயின்" என்ற அமைப்பை உருவாக்கி குமரி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக , திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நடும் பணியை முதற்கட்டமாக அவர்கள் தொடங்கினர்.

மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டம்

இதுகுறித்து அமைப்பினர் கூறுகையில், " குமரி ஜவான்ஸ் அமைப்பின் சமுதாய பணிகள் தங்களை ஈர்த்ததால் குமரி நேச்சுரல் கிங்ஸ் அமைப்பு உருவானதாகவும், இந்த அமைப்பில் சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை - பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details