கன்னியாகுமரி: ஜீரோபாயிண்ட் முதல் கோதையாறு வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை, கடந்த 15 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோதிரமலை மற்றும் தச்ச மலை உள்ளிட்ட 18 கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இதில் ஒரு மோசமான சூழலையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கிராம மக்கள் அனுபவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை பெற முடியாமல் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பல முறை சாலையை செப்பனிட வைத்த கோரிக்கை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மலைவாழ் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மோதிரமலை அருகே உள்ள சாலையில் வேலி கட்டி மறியலில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக சாலைகள் பராமரிப்பின்றி இருப்பதால், அதனை சரி செய்யக்கோரி மலைவாழ் மக்கள் வேலி கட்டி மறியலில் ஈடுபட்டனர் இதன்மூலம் 5க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்களை சிறைப்பிடித்த மக்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:உயிரை சூறையாடும் சென்னை சாலைகள்.. சீரமைக்கப்படுமா?