கன்னியாகுமரி தூத்தூர் பகுதியைச் சேர்ந்த வில்லியம், நசியான், டெரின், கிளீட்டஸ், ஜோர்ஜ், பினோ, சக்திவேல், முத்து அலி ஆகியோர் கடந்த மே மாதம் 24ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் லட்சத்தீவு கடல் பகுதிக்கு சென்றனர்.
லட்சத்தீவில் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் நாளை குமரி வருகை - 8 மீனவர்களுக்கு ஜாமீன்
கன்னியாகுமரி: லட்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்தபோது கைது செய்யப்பட்ட குமரி மீனவர்கள் எட்டு பேர், நாளை ஜாமினில் வருகின்றனர்.
அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படையினர், சந்தேகத்தின் பேரில் அவர்கள் அனைவரையும் விசைப்படகுடன் சிறைபிடித்தனர். பின்னர், 25 நாட்கள் விசாரணை கைதியாக காவல் நிலையத்தில் இருந்த அவர்கள், ஜூன் 18ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து லட்சத்தீவு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தங்களை ஜாமினில் விடுவிக்கக்கோரி லட்சத்தீவு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதனடிப்படையில், அவர்களுக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் எட்டு பேரும் நாளை கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.