தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் தீ விபத்து; ரூ.2 கோடி பொருள்கள் சேதம்! - Kanyakumari District News

கன்னியாகுமரி: திரிவேணி சங்கம் அருகேயுள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.

குமரியில் தீ விபத்து
குமரியில் தீ விபத்து

By

Published : Jan 9, 2021, 9:53 AM IST

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கன்னியாகுமரியை சுற்றி பார்த்துவிட்டு, இங்கிருந்து ஞாபகார்த்தமாக பொருள்களை வாங்கிச் செல்வதற்காக பேன்சி கடைகள், பொம்மை கடைகள், எலக்ட்ரானிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்கள் என 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் திரிவேணி சங்கமம் மற்றும் காந்தி மண்டபம் பகுதியில் இன்று (ஜன.09) அதிகாலை அளவில் தீப்பற்றி எரிவதாக, தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

அதற்குள் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவி அங்கிருந்த 63 கடைகளிலும் பரவி, கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் ஹோட்டல்கள், பேன்ஸி கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பொம்மை, சங்கு, துணி போன்ற கடைகள் மற்றும் கடைகளில் உள்ள ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி ஆகும்.

எனினும் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் போராடி தடுத்தனர். தீ விபத்து மின்சாரக் கசிவினால் ஏற்பட்டதா? அல்லது எவ்வாறு வேறு ஏதேனும் காரணங்களா? என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்வீட்ஸ் கடையில் திருட்டு: போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details