கடந்த சில நாள்களாகச் சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. அதன் காரணமாக குமரி மாவட்டத்திலிருந்து சீன நாட்டுக்கு பல நூறு டன் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த உலகப்புகழ்பெற்ற கிராம்பு ஏற்றுமதியும் முற்றுமுழுதாகத் தடைப்பட்டுள்ளது.
இதனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கிராம்பு அளவைப் பொறுத்து உள்ளூரில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுவந்த கிராம்பின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி உள்நாட்டு மொத்த கிராம்பு வியாபாரிகள் கிராம்பு விலையை குறைத்து விலை பேசி வாங்கிவருகின்றனர்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த குமரி மாவட்ட கிராம்பு விவசாயிகள், “ சீன ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதால், 750 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவந்த ஒரு கிலோ கிராம்பு 500 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.