தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி மாவட்ட ‘அத்திப்பட்டி’கள் - தொடரும் மக்களின் அவல நிலை! - அத்திப்பட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தால் அழிக்கால் கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்ததை தொடர்ந்து, கொட்டில்பாடு மீனவ கிராமத்திலும் தடுப்புச்சுவர் உடைந்து சேதம் அடைந்துள்ளது.

குமரி மாவட்ட ‘அத்திப்பட்டி’கள் - தொடரும் மக்களின் அவல நிலை!
குமரி மாவட்ட ‘அத்திப்பட்டி’கள் - தொடரும் மக்களின் அவல நிலை!

By

Published : Jul 8, 2022, 9:51 PM IST

கன்னியாகுமரிமாவட்ட கடல் பகுதிகளில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் அழிக்கால் கடற்கரை கிராமத்தில், மூன்று தினங்களுக்கு முன்பு கடல் நீர் ஊருக்குள்ளும் வீடுகளிலும் புகுந்தது. ஆனால் இன்றும் இயல்பு நிலைக்கு அழிக்கால் கிராமம் திரும்பாத நிலையில், ராஜாக்கமங்கலம் முதல் தேங்காய்பட்டணம் வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சூறைக்காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.

இதனால் மேற்கு கடற்கரை பகுதிகளைச் சேர்ந்த பைபர் படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர். மேலும் தொடரும் கடல் சீற்றத்தால், கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து வீடுகளும் சேதமடைந்தன. முக்கியமாக இன்று (ஜூலை 8) குளச்சல் அருகே கொட்டில்பாடு, குளச்சல், சைமன்காலணி போன்ற கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்ட ‘அத்திப்பட்டி’கள் - தொடரும் மக்களின் அவல நிலை!

மேலும், அங்கு கட்டப்பட்டிருந்த கடல் அலை தடுப்புச்சுவர் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு உடைந்து சேதமாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க:வீடியோ: கன்னியாகுமரியில் ஊருக்குள் புகுந்தது கடல்நீர்

ABOUT THE AUTHOR

...view details