கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி அம்பாள் (83). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதில் லட்சுமணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அம்பாள் தனது உறவினரான சந்திரனின் வீட்டருகே குடிசை அமைத்து வசித்துவந்தார்.
இந்நிலையில் அந்த குடிசை நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அம்பாளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.