கன்னியாகுமரி மாவட்டம் கேரள தமிழக எல்லையான களியக்காவிளை காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி புரிபவர் மோகன அய்யர். மோகன அய்யர் தன் மனைவியுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு, தன்னை தற்கொலை செய்ய தூண்டுவதாக குற்றம்சாட்டி சூரியக்கோடு பகுதியை சேர்ந்த தோமன் (42) என்பவர் காணொளி ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்தக் காணொளி வலைதலப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.
காவல் சிங்கம் நல்லவரா? கெட்டவரா? லீக்கான வீடியோ - kaliyakkavilai
கன்னியாகுமரி: கேரள அரசால் கவுரவிக்கப்பட்ட களியக்காவிளை உதவி காவல் ஆய்வாளர், தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதாக வாலிபர் ஒருவர் காணொளி வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழுதுக்கொண்டெ காணொளியில் பேசும் தோமன், 'நான் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் ஏதாவது வழக்கில் எனக்கு தூக்குதண்டனை கிடைக்க செய்வேன் என்று கூறி மோகன அய்யர் என்னை மிரட்டி வருகிறார். சில தினங்களில் நான் சாக போகிறேன். எனது மரணத்திற்கு உதவி ஆய்வாளர் மோகன அய்யரே காரணம்' என்று அந்த காணொளியில் கூறியுள்ளார். இந்த காணொளி விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இதுகுறித்து, கன்னியாகுமரி எஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள மோகன அய்யர், சபரிமலை விவகாரத்தில் கேரள பேருந்துகளை உடைக்க முற்பட்ட போராட்டக்காரர்களை தனியாளாக நின்று விரட்டி பேருந்துகளை காப்பாற்றியதற்காக கேரள அரசால் கவுரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.