கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி வருகிற 23ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டபட இருக்கும் நிலையில், இதன் ஆரம்பமாக இறச்சகுளம், பூதப்பாண்டி திட்டுவிளைப் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது. இதில் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
குழந்தைகள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி! - கிருஷ்ண ஜெயந்தி விழா
கன்னியாகுமரி : இறச்சகுளம் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து ஊர்வலமாகச் சென்றனர்.
குழந்தைகள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து ’ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா’ என்று பக்தி கோஷம் போட்டவாறு இறச்சகுளம் முதல் நாவல்காடு வரை ஊர்வலமாகச் சென்றனர்.