கன்னியாகுமரி: ஆவணி மாதம் கிருஷ்ணபட்சத்து அஷ்டமி நாளில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் உலகில் அவதரித்ததாக ஐதீகம் இருந்து வருகிறது. நேற்று ஆவணி மாதம் அஷ்டமி நட்சத்திரத்தையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாபட்டது.
அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆலயங்களிலும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ஆதிகேசவ பெருமாள் கருவறை முன்பு அமைந்துள்ள உதய மார்த்தாண்ட மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.