தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் நல்ல மழை வேண்டி 1001 பெண்கள் திருவிளக்கு பூஜை - Swamithoppu

நாகர்கோவில்: சுவாமிதோப்பு செட்டிவிளை முத்தாரம்மன் கோயிலில், நாட்டில் நல்ல மழை பெய்து அனைத்து விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டி 1001 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

Kovil thiruvilaku pooja

By

Published : Apr 24, 2019, 2:54 PM IST

கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிதோப்பு செட்டிவிளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடைவிழா நேற்று (ஏப்ரல் 23) தொடங்கியது.

இதில் முதல் நிகழ்ச்சியாக நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டி 1001 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

வெள்ளையந்தோப்பு, சந்தையடி, கோட்டவிளை, தென்தாமரைகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி பெண்கள் ஆர்வமுடன் வந்து இந்தத் திருவிளக்கு பூஜை வழிபாட்டில் பங்கேற்றனர்.

தொடர்ந்து அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, வில்லிசை ஆகியன நடந்தது. இரண்டாவது நாளான இன்று காலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து சமபந்தி விருந்து உள்ளிட்டவை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நல்ல மழை வேண்டி 1001 பெண்கள் திருக்குவிளக்கு பூஜை

ABOUT THE AUTHOR

...view details