கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள ஆசாரிப்பள்ளம் அம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் லலிதாகுமாரி (22). இவர் கடந்த 10 நாள்களாக மணலிகரையிலுள்ள அவரது அக்கா ராஜேஸ்வரி வீட்டில் வசித்துவந்தார்.
குமரியில் இளம்பெண் மாயமானது குறித்து போலீஸ் விசாரணை - கன்னியாகுமரி குற்றச் செய்திகள்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் கொற்றிக்கோடு அருகே இளம்பெண் மாயமானது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Young girl missing
இந்நிலையில், நேற்று (அக். 23) மாலை தனது தோழி வீட்டுக்குச் செல்வதாக அக்காவிடம் கூறிவிட்டு சென்ற லலிதாகுமாரி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து உறவினர் வீடு உள்பட பல இடங்களில் அவரை தேடியும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, இது குறித்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லலிதாகுமாரியை தேடி வருகின்றனர்.