ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலின் தூக்க நேர்ச்சை திருவிழா! - Thooka Nerchai

கன்னியாகுமரி: பிரசித்திப்பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெற்றது.

kollamkodu
kollamkodu
author img

By

Published : Mar 18, 2021, 3:36 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய வரலாற்று சிறப்புவாய்ந்த கோயில்களில் ஒன்றானது தமிழக கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோயில்.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், பிறந்த குழந்தைகள் நோய் நொடியின்றி வாழவும் பெற்றோரின் வேண்டுதல்களின் அடிப்படையில் தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெற்றுவருகிறது.

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலின் தூக்க நேர்ச்சை திருவிழா
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தூக்க திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய தூக்க நேர்ச்சை விழா இன்று (மார்ச் 18) தொடங்கியது.
40 அடி வில்லில் தூக்க காரர்கள் தலைகீழாக தொங்கி பச்சிளம் குழந்தையை நெஞ்சில் அணைத்து அந்தரத்தில் தூக்க வில்லில் தொங்கியபடி கோயிலை ஒரு முறை வலம்வந்தனர்.

இந்த ஆண்டு இன்றைய விழாவில் இந்தியா முழுவதும் இருந்து 1,092 குழந்தைகளுக்கு நேர்ச்சை நடைபெற்றது. குளச்சல் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி தலைமையில் 300-க்கும் மேள்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக் கழகம் சார்பில் மார்த்தாண்டம் களியக்காவிளை, கருங்கல் பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details