கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தைச் சரி செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்களின் உடல் நலத்தைக் காக்கும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கப்படுகிறது.