கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த 66 வயதுடைய நபர், திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர், முட்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதுடைய குழந்தை ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் நேற்று உயிரிழந்தனர்.
குமரியில் உயிரிழந்த மூவருக்கும் கரோனா தொற்று இல்லை - corona deaths
10:46 March 29
கன்னியாகுமரி: கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மூன்று பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை எனத் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இறந்தவர்களின் தொண்டை, ரத்த மாதிரிகளை கரோனா கண்டறிதல் சோதனைக்குள்படுத்தியபோது, அவர்கள் மூவரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் மூவரும் வெவ்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவர்கள் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழப்பு