தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’விவசாயிகள், பொது மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்’ - கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் - கன்னியாகுமரி அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொது மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

By

Published : May 29, 2021, 12:11 AM IST

கன்னியாகுமரியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. பெரும்பாலான விளை நிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்நிலையில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை நிதி அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று (மே.28) நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குமரி மாவட்ட வெள்ள சேதத்தில் வீடு இடிந்து அவதிப்படுபவர்களுக்கு நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறியது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்படும். குமரி மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். அதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

மின்சார வாரியத்தைச் சேர்ந்த 173 மின்கம்பங்கள் உடைந்துள்ளன. 150க்கும் மேற்பட்ட கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீரில் மூழ்கிய இருபது மின்மாற்றிகளையும் சரிசெய்யும் பணி நடை பெற்று வருகிறது. விருதுநகரில் இருந்தும் மின் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.

பருவகாலங்களில் மழை பொழிய ஆரம்பித்த சில நாள்களிலேயே வெள்ளத்தின் வரவை கணக்கில் கொண்டு, அணைகளிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் இது போன்ற வெள்ள சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

குமரியில் இன்றைய நிலவரப்படி 238 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்தால்தான் சேத மதிப்பு தெரிய வரும். சேதக் கணக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. வேளாண் துறை மூலம் விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. சேத மதிப்புகள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டு, குமரி மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்” என்றார்.

இதையும் படிங்க : அதிர்ச்சி தகவல்: பேசினால் பரவும் கரோனா!

ABOUT THE AUTHOR

...view details