கரோனாவால் மனிதாபிமானம் காற்றில் பறந்துகொண்டிருக்கும் இக்கட்டான இந்நேரத்திலும், மக்களின் இதயம் கல் இல்லை என்பதை கன்னியாகுமரி காவல் துறையினர் தங்களது செயல் மூலம் நிரூபித்துள்ளனர்.
கன்னியாகுமரி இரணியல் அருகே கொடுப்பகுழி பகுதியில் கோயில் கட்டட பணிகளுக்காக நாகையைச் சேர்ந்த 25 தொழிலாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஒரு மாதமாக குடும்பத்துடன் தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சத்தால் மாநில எல்லைகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் சொந்த ஊர் போக முடியாமலும், உணவின்றியும் தவித்துவந்தனர். இதையடுத்து, நடைபயணத்திலே நாகை மாவட்டத்திற்கு செல்ல முடிவுசெய்து குழந்தைகளுடன் புறப்பட்டுள்ளனர்.
ஊரடங்கில் நடைபயணமாக நாகை புறப்பட்ட மக்கள் அவர்களை நாகர்கோவில் பகுதியில் வாகன சோதனையிலிருந்த காவல் துறையினர் தடுத்துநிறுத்தி விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் நாகை செல்வதற்கு வாகன வசதி ஏற்படுத்தி நாகர்கோவிலிலிருந்து வழியனுப்பிவைத்தனர். காவல் துறையினரின் மனிதாபிமான இந்தச் சேவையை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க:நேசிக்கவைத்த புறக்கணிக்கப்பட்ட சமூகம்: கரோனா கற்பித்த மனிதம்!